Thursday, May 17, 2012

வழக்கு எண் 18/9

என்ன எழுதுவது எதைப் பற்றி எழுதுவது என்று யோசிக்கவே சோம்பல் பட்டுக்  கொண்டு இருந்த போது
  வழக்கு எண் 18/9 பார்க்க நேர்ந்தது.  . சரி மறுபடியும் சினிமா   விமர்சனமா 
என யோசிக்காமல்
 எழுதியே விடலாம் என்று முடிவு செய்தேன்.
தலைப்பைப் போலவே படமும் மிகவும் வித்யாசமானது தான். பிடிக்காத பெண்ணின்
 முகத்தை ஆசிட் ஊற்றி
சிதைப்பது என்ற குரூரமான பழக்கம் நம் சமூகத்தில் உள்ளது. கதைக்கான ஒன் லைன் அது தான்.  அதை மட்டும் வைத்துக் கொண்டு நம் சமூகத்தில் நடக்கும் பல் வேறு அவலங்களை படம் படம் பிடித்து காட்டுகிறது.  பணமும் அதிகாரமும் இருப்பவன் செய்யும் அழிச்சாட்டியங்கள், ஏழைகளாய்ப் பிறந்ததாலேயே அவர்கள் இச்சமூகத்தில் படும் அவலங்கள், ஊடகங்களும், இணையமும் சீரழித்து வைத்திருக்கும் மாணவ சமுதாயம், அரசியல்வாதிகளின் போக்கு, விவசாய நிலங்களை சூறையாடும் real estate brokerகள் கந்து வட்டி கொடுமை, வடனாட்டு கம்பெனிகளுக்கு கொத்தடிமைகளாய்
 விற்க்கப்படும் சிறார்கள்,
சிதைந்து வரும் கூத்து கலை என எல்லா விஷயங்களையும் பிரச்சார நெடி இல்லாமல் , தனியே    துருத்திக் கொண்டிராமல்    , கதை போகும் போக்கிலேயே சொல்லி இருக்கும் விதம் அருமை. platfora-க் கடையில் வெலை செய்யும் வேலு, அவன் காதலிக்கும் வேலைக்காரப் பெண் ஜோதி, பணக்காரன் தினேஷ், அதே apartment-ல் வசிக்கும் பள்ளி மாணவி ஆர்த்தி, இந்த வழக்கை விசாரிக்கும் inspector இவர்கள் 5 பேரை சுற்றி தான் கதை பின்னப்படுள்ளது. முதல் பாதியில் வேலுவின் பார்வையில் வரும் கதையில் மற்ற இரண்டு பாத்திரங்களும் பின்புலமாக வருவதும், அதே விஷயம் ஆர்த்தியின் பார்வையில் வரும் போது ஆர்த்தியும் தினேஷும் முன்னிலைபடுத்தப்பட்டு மற்ற இருவரும் பின்புலமாக வரும் technic  ரசிக்க வைக்கிறது. அப்பாவி வெள்ளந்தி பையன் கேரக்டருக்கு ஸ்ரீ சரியான பொருத்தம். அதே போல வேலைக்காரியாக அதிகம் பேசாத ஊர்மிளா, பணக்காரத் திமிர் பிடித்த விடலைப் பையனாக வரும் மிதுன், வீட்டிற்கு பயந்தும் பயப்படாமலும் இளமைத் துணிச்சலில் தடுமாறும் பெண்ணாக மனிஷா,அதிகாரமும், ஆண்வமும் கலந்து வஞ்சகமும், நைச்சியமுமாக பேசும் inspector, கூத்துக் கலைஞன் என எல்லோரும் வெளுத்து வாங்குகிறார்கள். சின்ன சின்ன character-களில் வரும் தாடிக்கார முதலாளி, ரோசி அக்கா, ஜோதியின் அம்மா, மிதுனின் அம்மா போன்றொரும் அற்புதமாக நடித்து இருக்கிறார்கள். குட்டி குட்டி நுணுக்கங்கள் ரசிக்கத்தக்க காட்சிகள் படத்தில் நிறைய. ஏரியல் வியூவில் வரும் முதல் காட்சி -- பின்னால் மொட்டை மாடி    தினேஷின் வியூ என்பது தெரிய வரும் இடம், ரோசி அக்கா குடிப்பதை நிறுத்தி விடும் என்பதை symbolic-ஆக காட்டும் இடம், ஹீரோ பட்டினியால் தவிக்கும் போது நகர்ந்து செல்லும் tupperware tiffin boxgalin லோ ஆங்கிள் போன்றவை. கொஞ்சம் அசந்தாலும் சுலபமாய் ஆபாசத்தை தொட்டு விடும்  சாத்தியமுள்ள திரைக்கதையில், மிக  decent-ஆக அதை கையாண்டிருக்கும் இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு ஒரு சபாஷ். பின்ணணி இசைக் கோர்ப்பின்றி வரும் " வானத்தையும் எட்டி புடிப்பேன்" பாடல் சுகம். commercial cinema-வுக்கென எந்தவொரு compromise-ம் செய்து கொள்ளாமல் மிக நேர்மையாய் ஒரு படம் தந்தமைக்கு வழக்கு எண் 18/9 குழுவினருக்கு என் வந்தனம்.

Monday, December 20, 2010

என் இனிய தொலைக்காட்சியே

தொலைக்காட்சி இந்தியாவில் 70களில் அறிமுகமாகி இருந்த நேரம். தொலைக்காட்சி பற்றிய என் நினைவுகளோ 70களின் கடைசி வருடங்களில் தொடங்குகிறது. நாங்கள் மத்திய
சென்னையில் வசித்து வந்த சமயம் அது. தெருவுக்கு ஒன்று அல்லது
இரண்டு வீடுகள் அதுவும் பணக்கார வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி
இருந்தது.சினிமா என்றால் தியேட்டர் தான் என்று இருந்த காலங்களில்
வீட்டிற்குள் சினிமா அதுவும்  வாரம் ஒரு முறை என்பது எவ்வளவு சந்தோஷம்.
டிவி ஓனர்கள் அக்கம் பக்கத்தவர்கள் தங்கள் வீடுகளில் டிவி பார்ப்பதற்க்கு பைசா வசூலித்த கதை ஸ்வாரஸ்யமானது.

என் பக்கத்து வீட்டு முனியம்மா அக்கா [ அதற்கும் வயது 10 தான்] என் அம்மாவிடம் நைசாகப் பேசி பெர்மிஷன் வாங்கி அதோடு ஒரு 25 பைசா காசையும் [ என் டிவி படத்துக்கான டிக்கெட்] வாங்கிக் கொண்டு 5.00மணிக்கெல்லாம் டாண் என்று ஆஜராகி விடும். என் அப்பா இத்தனைக்கும்இரு வாரத்துக்கு ஒரு முறை சினிமா கூட்டி செல்வார். சென்னையின் அத்தனை தியேட்டர்களும் எனக்கு அத்துபடி.அப்படி ஒரு சினிமா பைத்தியம் நான். என் குஷிக்கு கேட்கவா வேண்டும் ?

பொதுவாகவே அந்த காலத்து வீடுகளில் ஹால் நல்ல விசாலமாக இருக்கும். குறைந்த பட்சம் 50 பேராவது ஒரு வீட்டில் படம் பார்க்க
கூடி விடுவார்கள். வீட்டு வாசலில் த்வாரபாலகர் மாதிரி அந்த வீட்டு
பெருசு உட்கார்ந்து தலையை எண்ணி காசை வாங்கி போட்டுக் கொள்ளும். சீக்கிரம் போனால் டிவிக்கு அருகில் தரை டிக்கெட் கிடைக்கும்.
இல்லையென்றால் எட்டி எட்டி படம் பார்த்து கழுத்து வலி தான் மிஞ்சும்.
கொடுத்த நாலணா வேஸ்ட். ஹாலைச் சுற்றி வீட்டு ஓனர்கள் சேர்களிலும்
சோஃபாக்களிலும் அமர்ந்து இருக்க, நடுவில் ஒருவர் மடி மேல் ஒருவர்
உட்காராத குறையாக எல்லோரும் அமர்ந்து தூர்தர்ஷன் லோகோ எப்பொழுது வரும் என்று டிவியையே பார்த்துக் கொண்டிருப்போம்.

கலர் டிவி பெரிதாக அறிமுகமாகாத காலம் அது.கண்ணுக்கு கூலர் போடுவது போல் பச்சை, மஞ்சள், நீலம், பஞ்ச வர்ணம் ?? என பல கலர்களில் டிவி ஸ்க்ரீன்கள் கிடைக்கும். கலர் டிவி இஃபெக்ட்???அதை
வேறு மாட்டி தொலைத்து சாகடிப்பார்கள்.செய்திகள் இடைவேளையில்
வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓட வேண்டும். இத்தனை சிரமங்களுக்கு
இடையிலும் நான் சினிமா பார்ப்பேன். சொத்தை சினிமா என்றாலும் அதை பார்த்து விட்டு பள்ளியில் அடுத்த நாள் பந்தா விடலாம் இல்லையா.

நாங்கள் புற நகர்ப் பகுதிக்கு வீடு மற்றிய நேரம், புது இடம் என்பதாலும்,நான் கொஞ்சம் வளர்ந்து விட்டதாலும் எனக்கே யார்
வீட்டுக்கும் செல்ல பிடிக்கவில்லை. dyanora,solidaire ஆகிய இரண்டுbrand-கள்
மட்டுமே இருந்து வந்த காலத்தில் சிக்கனத்தின் சீதனம் sears டிவி எங்கள்
வீட்டு ஓனர் வீட்டில் வந்து இறங்கி என் அப்பாவின் வயிற்றில் புளியை
கரைத்தது. டிவி பார்க்க வாருங்கள், என்று அடிக்கடி ஓனர் எங்களை
அழைப்பது வாடிக்கையானது. அம்மா இதையெல்லாம் விரும்ப மாட்டார்
என்பதால் அப்பாவிடம் சொல்லி ஒரு dyanora டிவி எங்கள் வீட்டுக்கு
வந்தே... விட்டது.

திருகு குமிழ்களும்,நீல ஸ்க்ரீனும், ஷட்டெர் வசதியுடம் கூடிய டிவி வைக்கும் பெட்டி, ஸ்டாண்ட் என்று டயனோரா ஜம்மென்று எங்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது.அய்யகோ! ஆனால் அதை ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் உரிமை அப்பாவிடம் மட்டுமே இருந்தது.
எல்லா வீடுகளிலும் டிவி வந்து விட்டதால் எல்லா மொட்டை மாடிகளிலும்
ஆன்டனாக்கள் நிலை கொண்டன.காக்கா உட்கார பனம் பழம் விழுகிறதோ
இல்லையோ, கட்டாயம் ஆன்டனா அசைந்து டிவி மக்கர் பண்ணும். அப்பா கீழே இருந்து சரி செய்ய  ஒவ்வொரு முறையும் ஆன்டனாவை திருப்ப
மாடிக்கு செல்ல நானே பலி கடா ஆக்கப்படுவேன்.மேலே ஏறி இறங்குவது - அல்ல சிரமம். அந்த இடைவெளியில் நாடகமோ,சினிமவோ குறைந்த பட்சம்
audio வாவது கேட்கலாமே அதுவும் போய் விடுமே.ஆடிக் காற்றுக்கும் ஆன்டனாவுக்கும் உள்ள பொருத்தம் ஓஹோ. மீனம்பாக்கம் அருகில் என்பதால் பிளேன்களின்
இரைச்சல் வேறு.நானெல்லாம் விக்ரமாதித்யன் போல, எவ்வ்ளவு
 இடையூறு வந்தாலும் விட மாட்டோம்ல.

ஆனால் அந்த நாளைய நிகழ்ச்சிகள் அத்தனையும் தரமானவை. டிவி பெட்டி
தடங்கலுக்கு அடிக்கடி வருந்தினாலும்,எல்லோரும் விரும்பியே டிவி பார்த்தார்கள்.
  நான் பேசும் இந்திக்கு வட இந்தியர்கள் சபாஷ் போடும் போது, அத்தனை
பெருமையும் என் டிவிக்கே என நினைப்பேன்.முக்கால்வாசி நேரம் ஒளிபரப்பட்ட இந்தி நிகழ்ச்சிகளால் இந்தி எழுத படிக்க தெரியும் முன்பே,
சரளமாக பேச வந்து விட்டது.இடப்பற்றாக்குறையால் என் இனிய dyanora-வை விற்று விட்டு கலர் டிவி வாங்கிய போது நான் அழுதே விட்டேன்.

இன்று cable,satellite, dish உதவியால் 200,300 channelகள், 24 மணி நேர ஒளிபரப்பு
கட்சிக்கு ஒன்று,நடிகருக்கு ஒன்று,sports,news,cartoons என ஆயிரம் வசதிகள்
இருந்தாலும் எனக்கு ஏனோ டிவி பார்க்க பிடிப்பதேயில்லை.நான் அன்று ரசித்த, மகிழ்ந்த, கொண்டாடிய என் இனிய தொலைக்காட்சின் நினைவுகள் மட்டுமே இன்று என்னிடம் மிச்சம்
இருக்கின்றன.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது எவ்வளவு உண்மை.

Friday, December 3, 2010

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது

சமீபத்தில் நாளிதழில் வாசித்த செய்தி ஒன்று மனதை சற்று பாதித்தது. assisting a terminally ill patient to die என்பது தான் அது. மரணப் படுக்கையில் அல்லது தீர்க்க முடியாத நோயுடன் போராடுபவருக்கு அவர் மரணிக்க மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பது அதையும் சட்டப்படி அங்கீகரிப்பது. இன்றைக்கு உலக அலவில் ஸ்விஸ்சர்லாந்து உள்ளிட்ட ஓரிரு நாடுகளில் மட்டுமே இந்த சட்டம் அமலில் உள்ளது. அதுவும் இம்மருந்துகளை எடுத்துக் கொள்ள விரும்பும் நபர் மேற்ச்சொன்ன  காரண்ங்களால் அவதியுருபவராக இருத்தல் வேண்டும். அது மட்டுமன்றி முழு சுய நினைவுடனும் வலி நிவாரணிகளும் கூட உதவியற்று போகும் நிலையிலும் இருத்தல் வேண்டும். அவர் தன் கைப்பட எழுதிய கோரிக்கையை மருத்துவர் அங்கீகரித்த பின்னரே அரசு அதனை ஏற்கும்.வாழ்வதற்க்கு சிறிதேனும் வழி இருந்தாலும் அவருக்கு இம்முறை பரிந்துரைக்கப்பட மாட்டாது.இன்னும் சில மேற்க்கத்திய நாடுகள் இச்சட்டத்தை அமலாக்குவதைப் பற்றி யோசித்து வருகின்றன.

 கருணைக் கொலைபோன்ற சில விஷயங்களையே கூட பேசத் தயங்கும்
 சமூகம் நம்முடையது. தற்கொலைக்கு முயல்பவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் ஆகி விடுகிறார்கள். [ அவர்கள் எத்தகைய சூழலில் அவ்வாறு செய்தாலும் சரி]   இப்படி ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு சிந்திக்கவேனும் முடியுமா ?

 Dying with dignity - என்கிற சமச்சாரமெல்லாம் இப்பொழுது தான் மேலை நாடுகள் பேசுகின்றன. ஆனால் சங்க இலக்கிய காலந்தொட்டே நம் சமூகத்தில் அப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மரணம் என்பது மற்றவர் மதிக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதில் நம் முன்னோர்கள் தெளிவாக இருந்தார்கள்.ஆன்மா,மறு பிறவி, மரணமில்லா பெரு வாழ்வு
 ஆகியவற்றைப் பேசிய சமூகத்தில் மரணம் என்பது வாழ்வின் ஒரு அங்கம் மட்டுமே. ஒருவன் தன் வாழ்நாளின் கடமைகளை முடித்த பின்பு விரும்பி மரணத்தை
ஏற்பதென்பது பல்வேறு இலக்கியங்களில் கூறப்படுள்ளது. தன் கடமைகளை
 முடித்தவன் கானகம் சென்று வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தல் என்பது "வடக்கிருந்து உயிர் நீத்தல்
எனப்படும். ஒருவரை ஒருவர் காணாமலே நட்பு கொண்டிருந்த கோப்பெருஞ்சோழன்
பிசிறாந்தையார் பற்றி நம் இள நிலை வகுப்புகளில் படித்துள்ளோம். அந்த சோழனும் வடக்கிருந்து உயிர் நீத்தவன் தான்.

மரணம் - உயிர் பயம் - எவற்றைக் கண்டும்  நம் முன்னோர் அதிகம் அஞ்சியதில்லை. அவர்கள் அற நெறியோடு வாழ்வை வாழ எப்படி வழி
வகுத்தார்களோ அதைப் போல் சாவைக் கண்டும் அஞ்சினார்களில்லை.
 அறம், வீரம், இரக்கம்,ஈகை இவற்றின் முன் மரணம் துச்சமாகவே மதிக்கப்பட்டது. நம் இனத்திற்கு
கொடையாக அவர்கள்  வழங்கிய இலக்கியங்களும் இதையே பகர்கின்றன.

இத்தனை செழுமையான வாழ்வு முறை வாழ்ந்த நாம் எங்கே இடறினோம் ?
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சமூகம் இன்று என்னவாகி உள்ளது. ஒழுக்கக் கேடுகளாலும்,சமூகச் சிக்கல்களாலும் சீரழிந்துள்ளது. கலச்சாரம்
, பண்பாடு என்கிற போலிப் பார்வையில் தனி மனித உரிமைகள் , சமூக வாழ்வு எதையும் மதிக்கத் தெரியாமல் நம் தொன்மையையும், உண்மையான பண்பாட்டையும் தொலைத்து நிற்கிறோம்.இதைப் பற்றி பேசினால் ஆயிரம்
ப்ளாக்குகள் கூட போ றா.

அடிப்படை மனித உரிமைகளுக்கே , ஏன்  எல்லா உயிர்களும் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போராடும் ஒரு சமுதாயத்தில் இப்படி ஒரு விஷயத்தை பற்றி பேசவோ, விவாதிக்கவோ கூட இன்னும் கால் நூற்றண்டு காத்திருக்க வேண்டும்.                

Wednesday, November 17, 2010

project பூதங்கள்

உங்கள் பிள்ளைகள் cbse பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும், englishஇல் பொளந்து கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டவரா நீங்கள். அய்யோ நாம தான் corporation school-la படிச்சோம் நம்ம பிள்ளையாவது படிக்கட்டுமேன்னு நினைச்சீங்களா ! அப்படி நினச்சுதான் நானும் போட்டேங்க. [ ஆனா அதுக்கே அரசு துறையில நல்ல வேலைல நல்ல சம்பள்ளத்துல தான் இருக்கோம்] ஆனா நடக்கறதே வேறங்க. CCE - ஒண்ணு வந்திருக்கு பாருங்க. project project-nnu சொல்றாங்க பாஸு. அட, இது ஒண்ணும் software project இல்லப்பா. எனக்கு தெரிஞ்சு ப்ளஸ் டூ படிக்கும் போது எதோ ரெண்டு assignment பண்ணதா ஞாபகம். இப்போ மூணாங்க்ளாஸ் படிக்கற பசங்களுக்கு கொடுத்து இருக்க சில project-அ பாருங்க. சும்மா சாம்பிளுக்கு -
1. ரெண்டு மூணு வாரத்துக்கு வானிலை முன்னறிவிப்பு பத்தி தொடர்ந்து கவனிச்சு ஒரு அறிக்கை தயார் பண்ணணும்.[ அட அந்த வேலைய நாம பண்ணிட்டா அப்பறம் ரமணணுக்கு யார் வேலை கொடுப்பாங்க ]
2.இந்தியாவுல இப்போ எவ்வளவு POPULATION. எந்த எந்த மாநிலத்துல எவ்வளவு பேர் இருக்காங்க அதுக்கு ஒரு detailed report. [ இதுக்கு census dept ல வேலைக்கு சேர்ந்திருக்கலாமே]
இதெல்லாம் எங்கே இருந்து எடுக்கறது. நீங்கல்லாம் parent-a இருக்கவே லாயக்கில்லை. உங்களுக்கு நெட் பார்க்க தெரியாதா ? ப்ரௌஸ் பண்ண தெரியதா ? ஈ மெயில் கிடையாதா ? அய்யோ ! உங்க வாழ்க்கையே waste. முதலில் உங்க பர்ஸ் கனமாக இருக்கா ?
A4 sheet, marker pens, colour pencils, crayons, scetch pens, stick file, flat file,gum, fevicol, stickers, pictures etc.etc.etc.,எல்லாம் வாங்கணும்.  இனி stationery shopகளிலும் credit card, debit card வாங்க சொல்லணும். பர்ஸ காலி பண்ணி, அதுவும் பத்தாம பக்கத்துல இருக்க ATM la withdraw பண்ணி பாதி கடைய வீட்டுக்கு கொண்டு வந்தச்சா ? இனி தினமும் ரெண்டு மணி நேரம் நெட்-ல உக்காந்து படிங்க ! நெட் இருந்தா     மட்டும் போதாது தம்பி, அதுல தேடுற தெறமை வேணும். அதுவும் இல்லயா ? நீங்க படு waste. நல்ல வேளை கிச்சா போன்ற மென்பொருள் பற்றி நன்கறிந்த தினமும் தொழில் நுட்பம் பற்றி படிக்கும் அறிவார்ந்த நண்பர்கள் இருப்பதால் நான் தப்பித்தேன். பக்கத்தில் படுத்திருக்கும் பிள்ளையின் முகம் கூட கனவில் வருவதில்லை. இந்த project பூதங்கள் தான் வருகின்றன.எந்த தொல்லையும் வேண்டாமா ? பேசாமல் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து விடலாம். அங்கே எல்லாம் இந்த வேலைகளை ஆசிரியர்கள் தான் செய்கிறார்கள். காசும் மிச்சம்.
எனக்கென்னவோ அடுத்த முறை அவர்கள் கீழ்கண்ட project-கள் கொடுப்பர்களோ என தோன்றுகிறது
1. ஒபாமா அமெரிக்க பொருளாதாரத்தை முன்னேற்ற என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் ? அமர்த்த்யா சென்-நுடன் கலந்து ஆலொசித்து ஒரு அறிக்கை சமர்பிக்கவும்.
2.pascal - விதியை போல் புதியதொரு விதி கண்டு பிடித்து அதற்கு patent-ம் பெற்று- 10 நாட்களுக்குள் பள்ளிக்கு கொண்டு வரவும்.
      இப்பவே yahoo help-ல கேட்டு வெச்சா நம்ம வலைத் தள புலிகள் இதற்கும் ஒரு வழி சொல்லாமலா போய்டுவாங்க !

Tuesday, November 16, 2010

மனதை கவர்ந்த மைனா!!

கதை - வழக்கமான ஆனால் மஸாலா இல்லாத கிராமத்து காதல். அதற்கே உரிய எதிர்ப்புகள், மண் மணம் மாறா மக்கள், வசனந்கள் , சின்ன வயசு காதல், தடம் மாரி போகும் காதலர்களின் வாழ்க்கையில் விளையாடும் விதி, மனதை பிழியும் அதிரடி climax.
எல்லாம் வழக்கமான தமிழ் சினிமா போல தான். ஆனால் அதை அற்புதமான திரைக்கதையின் மூலம் பிரமாதமாக சொல்லி இருக்கும் ப்ரபு சாலமன் குழுவிற்கு ஒரு ஸபாஷ் போடலாம். சுருளி அடாவடி சிறுவன், பள்ளிக்கூடம் கட் அடித்து ஊர் சுற்றும் போக்கிரி, அப்பா ஒரு சீட்டாடி,  சந்தர்ப்ப வசத்தால் அனாதை ஆகும் மைனாவையும் அவள் அம்மாவையும் ஆதரிக்கிறான். சின்ன வயதில் இருந்தே மைனாவை பொத்தி பாதுகாக்கிறான். அவள் அம்மாவை அக்கா அக்கா என்று பாசத்தோடு வளைய வருகிறான். அவளும் மருமகனே, மருமகனே என்று உரிமை கொண்டாடுகிறாள். ஆனால் அதே சுருளி வளர்ந்து அவள் பெண்ணை கேட்கும் பொழுது வெடித்து எழுந்து தகராறு செய்கிறாள். அவள் கொடுக்கும் போலீஸ் கம்ப்ளைன்டில் உள்ளே போகும் சுருளி 15 நாள் தண்டனை காலம் முடியும் முன்பே தீபாவளிக்கு முன் தினம் இரவு மைனா-வின் திருமண ஏற்பாட்டை கேட்டு தப்பித்து வர, ஜைலர் பாஸ்கர், ஸுப்-ஜைலர் ராமையா இருவருக்கும் தீபாவளி தொலைத்து சுருளியை தேடி மலை பயணம் மேற்கொள்ள, கதை சூடு பிடிக்கிறது. ஒரு வழியா சுருளிய பிடித்து அவனோடு மைனாவும் வர சுருளி மீது செம்ம கடுப்பில் இருக்கும் ஜைலரும் சப்-ஜைலரும் அவர்களோடு செய்யும் பயணத்தின் முடிவில் அவர்களின் வெள்ளந்தி மனதையும், காதலையும் புரிந்து கொள்ள ஆனால் விதியின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது. அற்புதமான ஒரு travelling ஸ்க்ரிப்ட்.
உண்மையான ஹீரோ காமிரா தான். மனித காலடியே படாத பச்சை பசேல் இடங்கள், ஒத்தை அடி பாதையின் இரு புறமும் காமிராவை தேய்த்து செல்லும் மரக் கிளைகள், பள்ள தாக்குகள் என இயற்கை அழகை அள்ளி வந்திருக்கிறது காமிரா. சில நேரங்களில், ஒரு வேளை எந்த shotஐ மரக்கிளையில் தொங்கி கொண்டு எடுத்திருப்பார்களோ என்று சந்தேகப்படும்படியான பயந்கரமான ஷாட்-கள்.அற்புதமான துல்லியமான ஒளிப்பதிவு.
வித்தார்த் கூத்து பட்டறை தயாரிப்பாம். பார்த்தாலே தெரிகிறது. கொச கொச தாடியும் அலை பாயும் பரட்டை தலையும், அற்புதமான பாடி language, தெனாவட்டு நடையும் ப்ரமாத படுத்தி இருக்கிறார். மேக்கப் இல்லாத மைனா - சிந்து சமவெளி-யில் நடித்த அந்த அமலாவா... நம்ப முடியவில்லை. கண்கள் படம் முழுதும் ஆயிரம் கதை பேசுகின்றன.
கதையை தூக்கி நிறுத்துபவர்கள் ரெண்டு பேர். ஒருவர் சேது..ஜைலர் பாஸ்கர்-ஆக. பிடாரி மனைவியையும் அவள் வீட்டாரையும் சமாளிக்கும் அதே நேரம் கடமை தவறாத போலீஸாக எப்பொழுதும் இறுக்கமான முகத்துடன், சமயம் கிடைக்கும் பொழுது வெடிக்கும் மனிதனாக சேது நல்ல சாய்ஸ். பார்க்க பொன்வண்ணன் தம்பி போல இருக்கிறார்.  பணக்கார வீட்டு அடாவடி மனைவி , குடும்பத்தின் ஒரே பெண்ணான அவள் பேச்சுக்கு பூம் பூம் மாடு போல தலை ஆட்டி மாபிள்ளையை மிரட்டும் ரவுடி அண்ணன்கள், நாத்தி-யை பிடிக்காவிட்டாலும் புருஷனுக்கு பயந்து கொண்டு ஆமாம் சாமி போடும் மதனிக்கள், கண்களாலும் முக பாவனைகளாலும் ஜைலர் கணவனை மிரட்டி அடக்கும் மனைவி [ ஸுஸன்],எல்லா characterகளும் முத்திரை பதிக்கிறார்கள். இன்னும் படம் முழுக்க இது போல நெறைய characters  தெனாவட்டு பிடித்த தண்ட சோறு சுருளியின் அப்பா, மைனாவின் அம்மா, குழைவதாகட்டும், கண்களிலேயே மிரட்டுவதாகட்டும், பொந்கி எழுவதாகட்டும் அந்த அம்மா character செய்யும் பூவிதா கலக்குகிறார். ஸ்டூல் போட்டு பஸ்ஸில் ஏறும் குள்ள மனிதன், தண்ணி அடித்து விட்டு பேசும் பயணி.. என ஒரே ஒரு ஸீனில் தலை காட்டும் ஒவ்வொரு characterருமே அற்புதமா செதுக்கபட்டிருக்கிறது.

Next year ஃபிலிம் ஃபேர், விஜய் டிவி-க்களின் ஒட்டு மொத்த சாய்ஸ் for supporting actor, தம்பி ராமையா தான். மனுஷன் என்னமா கலக்குறார். அந்காடி தெருவில் சோடா புட்டி மேனேஜர்-ஆகவும், நெறைய படந்களில் சின்ன சின்ன காமெடி ரோல்-களிலும் வந்த ஆளா அது. நிமிடந்களில் முக பாவம் மாற்றி, காமெடி, வன்மம், க்ரோதம், நெகிழ்ச்சி, சோகம் என நவரசந்களையும் மனுஷன் பொளந்து கட்றார். Hats Off. நான் பயந்கர fan ஆயிட்டேன். காமெடிக்கு என தனி டிராக் இல்லை. கதையோடு இழைந்த காமெடி படத்தின் பலம். 'புலிய- பார்த்துட்டு ஒன்னுக்கு கூட போகலேன்னா புலிக்கு என்ன மரியாதை'  ' தீபாவளிக்கு கறி சோறு சாப்பிடணும் தான்; ஆனா நம்ம கறிய சாபிட்டுட்டு அதுகள் [அனிமல்ஸ்] தீபாவளி கொண்டாடிட்டா என்ன பண்றது' என்பது போன்ற வெடி சிரிப்புகள் படம் முழுக்க நெறைய.. வசனம் யாரோ தெரியவில்லை.
படத்தில் நெறைய லாஜிக் பொத்தல்கள். மலை ஊரிலேயே பிறந்து வளர்ந்த ஒருவனுக்கு ஏன் மற்றொருவர் வழி காட்ட வேண்டும்? ஹீரோயினை ஏன் ஜைலர் தன் வீட்டுக்கு வேற சாய்ஸ் இருக்கும் போது அழைத்து செல்ல வேண்டும்? எத்தனையோ தமிழ் படந்களில் பார்த்து சலித்த- படித்த ஹீரோயினை மூட்டை தூக்கும் படிக்காத ஹீரோ. அவன உருகி உருகி காதலிக்கும் ஹீரோயின். இன்னும் சொல்லலாம். ஆனால் குறை என்னவென்று சொல்ல வேண்டுமென தேடினால் மட்டுமே இவை கண்ணுக்கு தெரியும். மண் மணத்தோடு எழுதப்பட்ட அற்புதமான பாடல் வரிகள். [ யுக பாரதி என கேள்விபட்டேன்]
  படத்தின் ஒரே பலவீனம் இசை. சன் டிவி உபயத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ஆகி விடும். தனியாக FM-இல் கேட்க, CD-யில் கேட்க பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் படத்தின் நேடிவிடி-க்கு பாடல்களும் சரி, BGMமும் சரி ஒட்டவே இல்லை. இமான் நெறைய கிராமிய சந்கீதம் கேட்க வேண்டும்.
மொத்தத்தில் மைனா என் மனச கவர்ந்திடுச்சு நைனா………….