உங்கள் பிள்ளைகள் cbse பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும், englishஇல் பொளந்து கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டவரா நீங்கள். அய்யோ நாம தான் corporation school-la படிச்சோம் நம்ம பிள்ளையாவது படிக்கட்டுமேன்னு நினைச்சீங்களா ! அப்படி நினச்சுதான் நானும் போட்டேங்க. [ ஆனா அதுக்கே அரசு துறையில நல்ல வேலைல நல்ல சம்பள்ளத்துல தான் இருக்கோம்] ஆனா நடக்கறதே வேறங்க. CCE - ஒண்ணு வந்திருக்கு பாருங்க. project project-nnu சொல்றாங்க பாஸு. அட, இது ஒண்ணும் software project இல்லப்பா. எனக்கு தெரிஞ்சு ப்ளஸ் டூ படிக்கும் போது எதோ ரெண்டு assignment பண்ணதா ஞாபகம். இப்போ மூணாங்க்ளாஸ் படிக்கற பசங்களுக்கு கொடுத்து இருக்க சில project-அ பாருங்க. சும்மா சாம்பிளுக்கு -
1. ரெண்டு மூணு வாரத்துக்கு வானிலை முன்னறிவிப்பு பத்தி தொடர்ந்து கவனிச்சு ஒரு அறிக்கை தயார் பண்ணணும்.[ அட அந்த வேலைய நாம பண்ணிட்டா அப்பறம் ரமணணுக்கு யார் வேலை கொடுப்பாங்க ]
2.இந்தியாவுல இப்போ எவ்வளவு POPULATION. எந்த எந்த மாநிலத்துல எவ்வளவு பேர் இருக்காங்க அதுக்கு ஒரு detailed report. [ இதுக்கு census dept ல வேலைக்கு சேர்ந்திருக்கலாமே]
இதெல்லாம் எங்கே இருந்து எடுக்கறது. நீங்கல்லாம் parent-a இருக்கவே லாயக்கில்லை. உங்களுக்கு நெட் பார்க்க தெரியாதா ? ப்ரௌஸ் பண்ண தெரியதா ? ஈ மெயில் கிடையாதா ? அய்யோ ! உங்க வாழ்க்கையே waste. முதலில் உங்க பர்ஸ் கனமாக இருக்கா ?
A4 sheet, marker pens, colour pencils, crayons, scetch pens, stick file, flat file,gum, fevicol, stickers, pictures etc.etc.etc.,எல்லாம் வாங்கணும். இனி stationery shopகளிலும் credit card, debit card வாங்க சொல்லணும். பர்ஸ காலி பண்ணி, அதுவும் பத்தாம பக்கத்துல இருக்க ATM la withdraw பண்ணி பாதி கடைய வீட்டுக்கு கொண்டு வந்தச்சா ? இனி தினமும் ரெண்டு மணி நேரம் நெட்-ல உக்காந்து படிங்க ! நெட் இருந்தா மட்டும் போதாது தம்பி, அதுல தேடுற தெறமை வேணும். அதுவும் இல்லயா ? நீங்க படு waste. நல்ல வேளை கிச்சா போன்ற மென்பொருள் பற்றி நன்கறிந்த தினமும் தொழில் நுட்பம் பற்றி படிக்கும் அறிவார்ந்த நண்பர்கள் இருப்பதால் நான் தப்பித்தேன். பக்கத்தில் படுத்திருக்கும் பிள்ளையின் முகம் கூட கனவில் வருவதில்லை. இந்த project பூதங்கள் தான் வருகின்றன.எந்த தொல்லையும் வேண்டாமா ? பேசாமல் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து விடலாம். அங்கே எல்லாம் இந்த வேலைகளை ஆசிரியர்கள் தான் செய்கிறார்கள். காசும் மிச்சம்.
எனக்கென்னவோ அடுத்த முறை அவர்கள் கீழ்கண்ட project-கள் கொடுப்பர்களோ என தோன்றுகிறது
1. ஒபாமா அமெரிக்க பொருளாதாரத்தை முன்னேற்ற என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் ? அமர்த்த்யா சென்-நுடன் கலந்து ஆலொசித்து ஒரு அறிக்கை சமர்பிக்கவும்.
2.pascal - விதியை போல் புதியதொரு விதி கண்டு பிடித்து அதற்கு patent-ம் பெற்று- 10 நாட்களுக்குள் பள்ளிக்கு கொண்டு வரவும்.
இப்பவே yahoo help-ல கேட்டு வெச்சா நம்ம வலைத் தள புலிகள் இதற்கும் ஒரு வழி சொல்லாமலா போய்டுவாங்க !
I like your humour.
ReplyDeleteIncluding the part about calling me as one who knows software well.
:-)
Great writing. Continue.
simply superb malu. romba enjoy pannen. ida ida idathaan naan edhirparthen.
ReplyDeleteamma sammaya eruku.
ReplyDelete