சமீபத்தில் நாளிதழில் வாசித்த செய்தி ஒன்று மனதை சற்று பாதித்தது. assisting a terminally ill patient to die என்பது தான் அது. மரணப் படுக்கையில் அல்லது தீர்க்க முடியாத நோயுடன் போராடுபவருக்கு அவர் மரணிக்க மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பது அதையும் சட்டப்படி அங்கீகரிப்பது. இன்றைக்கு உலக அலவில் ஸ்விஸ்சர்லாந்து உள்ளிட்ட ஓரிரு நாடுகளில் மட்டுமே இந்த சட்டம் அமலில் உள்ளது. அதுவும் இம்மருந்துகளை எடுத்துக் கொள்ள விரும்பும் நபர் மேற்ச்சொன்ன காரண்ங்களால் அவதியுருபவராக இருத்தல் வேண்டும். அது மட்டுமன்றி முழு சுய நினைவுடனும் வலி நிவாரணிகளும் கூட உதவியற்று போகும் நிலையிலும் இருத்தல் வேண்டும். அவர் தன் கைப்பட எழுதிய கோரிக்கையை மருத்துவர் அங்கீகரித்த பின்னரே அரசு அதனை ஏற்கும்.வாழ்வதற்க்கு சிறிதேனும் வழி இருந்தாலும் அவருக்கு இம்முறை பரிந்துரைக்கப்பட மாட்டாது.இன்னும் சில மேற்க்கத்திய நாடுகள் இச்சட்டத்தை அமலாக்குவதைப் பற்றி யோசித்து வருகின்றன.
கருணைக் கொலைபோன்ற சில விஷயங்களையே கூட பேசத் தயங்கும்
சமூகம் நம்முடையது. தற்கொலைக்கு முயல்பவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் ஆகி விடுகிறார்கள். [ அவர்கள் எத்தகைய சூழலில் அவ்வாறு செய்தாலும் சரி] இப்படி ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு சிந்திக்கவேனும் முடியுமா ?
Dying with dignity - என்கிற சமச்சாரமெல்லாம் இப்பொழுது தான் மேலை நாடுகள் பேசுகின்றன. ஆனால் சங்க இலக்கிய காலந்தொட்டே நம் சமூகத்தில் அப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மரணம் என்பது மற்றவர் மதிக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதில் நம் முன்னோர்கள் தெளிவாக இருந்தார்கள்.ஆன்மா,மறு பிறவி, மரணமில்லா பெரு வாழ்வு
ஆகியவற்றைப் பேசிய சமூகத்தில் மரணம் என்பது வாழ்வின் ஒரு அங்கம் மட்டுமே. ஒருவன் தன் வாழ்நாளின் கடமைகளை முடித்த பின்பு விரும்பி மரணத்தை
ஏற்பதென்பது பல்வேறு இலக்கியங்களில் கூறப்படுள்ளது. தன் கடமைகளை
முடித்தவன் கானகம் சென்று வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தல் என்பது "வடக்கிருந்து உயிர் நீத்தல்
எனப்படும். ஒருவரை ஒருவர் காணாமலே நட்பு கொண்டிருந்த கோப்பெருஞ்சோழன்
பிசிறாந்தையார் பற்றி நம் இள நிலை வகுப்புகளில் படித்துள்ளோம். அந்த சோழனும் வடக்கிருந்து உயிர் நீத்தவன் தான்.
மரணம் - உயிர் பயம் - எவற்றைக் கண்டும் நம் முன்னோர் அதிகம் அஞ்சியதில்லை. அவர்கள் அற நெறியோடு வாழ்வை வாழ எப்படி வழி
வகுத்தார்களோ அதைப் போல் சாவைக் கண்டும் அஞ்சினார்களில்லை.
அறம், வீரம், இரக்கம்,ஈகை இவற்றின் முன் மரணம் துச்சமாகவே மதிக்கப்பட்டது. நம் இனத்திற்கு
கொடையாக அவர்கள் வழங்கிய இலக்கியங்களும் இதையே பகர்கின்றன.
இத்தனை செழுமையான வாழ்வு முறை வாழ்ந்த நாம் எங்கே இடறினோம் ?
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சமூகம் இன்று என்னவாகி உள்ளது. ஒழுக்கக் கேடுகளாலும்,சமூகச் சிக்கல்களாலும் சீரழிந்துள்ளது. கலச்சாரம்
, பண்பாடு என்கிற போலிப் பார்வையில் தனி மனித உரிமைகள் , சமூக வாழ்வு எதையும் மதிக்கத் தெரியாமல் நம் தொன்மையையும், உண்மையான பண்பாட்டையும் தொலைத்து நிற்கிறோம்.இதைப் பற்றி பேசினால் ஆயிரம்
ப்ளாக்குகள் கூட போ றா.
அடிப்படை மனித உரிமைகளுக்கே , ஏன் எல்லா உயிர்களும் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போராடும் ஒரு சமுதாயத்தில் இப்படி ஒரு விஷயத்தை பற்றி பேசவோ, விவாதிக்கவோ கூட இன்னும் கால் நூற்றண்டு காத்திருக்க வேண்டும்.
Thought provoking. Now people don't even live with dignity, then comes dying with dignity. They just want to enjoy life to the brim. needhi, nermai, nyayam, dharmam, these words are all fading away.
ReplyDeletewhat kOpperunchOzhan did was suicide. we may have to search for any instance if mercy killing existed in older times.
ReplyDeleteMercy killing should be allowed, but differentiating between mercy killing and murder can be tricky.